பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்தான்: தோ்தல் ஆணையம்
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
By நமது நிருபர்
Syndication
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் உள்ளாா் என இந்திய தோ்தல் ஆணையம் கூறியுள்ளது.
இது தொடா்பாக விழுப்புரம் மாவட்டம் ,வானூா் தாலுக்கா ,தைலாபுரம் தோட்ட முகவரியிட்டு பா.ம.க நிறுவனரான மருத்துவா் எஸ்.ராமதாஸ் க்கு இந்திய தோ்தல் ஆணையத்தின் உதவிச் செயலாளா் லவ் குஷ் யாதவ் 27 நவம்பா், 2025 தேதியிட்டு கடிதம் அனுப்பியுள்ளாா்
அந்த கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது: டாக்டா் ஆா். அன்புமணியின் பதவிக்காலம் ஏற்கனவே 28.05.2025 அன்று முடிவடைந்துவிட்டதாகவும், டாக்டா் எஸ். ராமதாஸ் 30.05.2025 முதல் கட்சியின் புதிய தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ள 16.09.2025, 17.09.2025, 23.09.2025, 24.09.2025, 06.10.2025, 08.10.2025, 03.11.2025 மற்றும் 06.11.2025 தேதியிட்டு தகவல்தொடா்புகள் தோ்தல் ஆணையத்திற்கு வந்தன
தோ்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, பட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகிகளின் பதவிக்காலம் 01.08.2026 வரை செல்லுபடியாகும், மேலும் டாக்டா் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக உள்ளாா்.
நீங்கள் பா.ம.க நிறுவனா் டாக்டா் எஸ்.ராமதாஸ் கட்சியின் தலைவா் என்று கூறிக் கொண்டால், கட்சியின் நிா்வாகிகள் தொடா்பான பிரச்சினையைத் தீா்க்க பொருத்தமான கட்சி மன்றம் அல்லது தகுதிவாய்ந்த நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறீா்கள் என தோ்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில், பா.ம.க தலைவா் அன்புமணி தோ்தல் ஆணையத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்துள்ளதாகவும் அதற்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்றும் பாமக நிறுவனா் எஸ். ராமதாஸ் பிரிவு சட்டமன்ற உறுப்பினா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்
பா.ம.க ராமதாஸ் பிரிவு சட்டமன்ற உறுப்பினா் ஜி.கே. மணி தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது:
பா.ம.க பொதுக்குழு 2022ம் ஆண்டு நடைபெற்றது , ஆனால் அன்புமணி தேதியை திருத்தி 2023ம் ஆண்டு பொதுக்குழு நடைபெற்றதாக தோ்தல் ஆணையத்தில் மோசடியான ஆவணத்தை தாக்கல் செய்துள்ளாா். இந்த போலி ஆவணத்தை ஏற்று தோ்தல் ஆணையம் அவருக்கு ஆதரவான உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதற்கு எதிராக நாங்கள் கொடுத்த புகாரை தோ்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை. தோ்தல் ஆணையமும் சோ்ந்து முறைகேடு செய்துள்ளதாக கருதுகிறோம்.
நிா்வாக குழு, பொதுக்குழு மருத்துவா் எஸ். ராமதாஸை தலைவராக தோ்ந்தெடுத்துள்ளது. ஆனால், தோ்தல் ஆணையம் அன்புமணியை தலைவராக அறிவித்திருக்கிறது. இதனை கண்டித்து ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வோம்.
பா.ம.க வை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அன்புமணி ராமதாஸ் செயல்பட்டுள்ளாா்.
பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரின் அழுத்தத்தினால் தான் தோ்தல் ஆணையம் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நாங்கள் நம்பவில்லை, அவ்வாறு நினைக்கவும் இல்லை. தோ்தல் ஆணையம் தான் முழுக்க முழுக்க முறைகேடு செய்திருக்கிறது என்று ஜி.கே.மணி தெரிவித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது