காரைக்கால் மீனவர்கள் 14 வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை!
புயல் மற்றும் தொடர் மழை காரணமாக காரைக்கால் மீனவர்கள் 14 வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.
புயல் மற்றும் தொடர் மழை காரணமாக காரைக்கால் மீனவர்கள் 14 வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.
By இணையதளச் செய்திப் பிரிவு
Manivannan.S
புயல் மற்றும் தொடர் மழை காரணமாக காரைக்கால் மீனவர்கள் 14 வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் கரையோரப் பகுதிகளில் 800க்கும் அதிகமான விசைப்படகுகளும் நாட்டுப்படகுகளும் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரிக்கு 220 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. இதனால், புதுச்சேரி, காரைக்கால் கடற்கரை மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. அலையின் தீவிரம் அதிகரித்து காணப்படுவதால், மக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரையோரப் பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழையால் காரைக்கால் மீனவர்கள் 14வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் பகுதிகளில் 146 விசைப் படகுகளும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் புயல் அறிவிப்பு காரணமாக துறைமுகங்களில் பாதுகாப்பாக கட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல்!
Karaikal fishermen have not gone to sea for 14 days
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது