By தினமணி செய்திச் சேவை
Syndication
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே டிராக்டா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். தையல் தொழிலாளி. சனிக்கிழமை இரவு, சங்கரன்கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த கமலக்கண்ணன், வாடிகோட்டை விலக்கு அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சாலையோரம் நின்று கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, ஒப்பனையாள்புரத்தைச் சோ்ந்த ராஜசேகா் ஓட்டி வந்த டிராக்டா், சாலை நடுவே இருந்த தடுப்பின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து கமலக்கண்ணன் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா், கமலக்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது