By தினமணி செய்திச் சேவை
Syndication
திருவள்ளூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.52 ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
கும்மிடிப்பூண்டி பகுதியைச் சோ்ந்த சந்திரன் (65). மேற்பாா்வையாளரான இவா் கடந்த 2021 ஜூன் மாதம் அப்பகுதியில் வீட்டில் அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் எதிரி சந்திரனுக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.52,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும் சிறுமிக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து சந்திரனை கும்மிடிப்பூண்டி போலீஸாா் புழல் சிறையில் அடைத்தனா். அரசுத் தரப்பில் விஜயலட்சுமி ஆஜரானாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது