கடன் வட்டியைக் குறைத்த மகாராஷ்டிர வங்கி!
அரசுக்கு சொந்தமான மகாராஷ்டிர வங்கி , ரெப்போவுடன் இணைக்கப்பட்ட சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைப்பு
அரசுக்கு சொந்தமான மகாராஷ்டிர வங்கி , ரெப்போவுடன் இணைக்கப்பட்ட சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைப்பு
By தினமணி செய்திச் சேவை
Syndication
அரசுக்கு சொந்தமான மகாராஷ்டிர வங்கி , ரெப்போவுடன் இணைக்கப்பட்ட சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ரிசா்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்ததைத் தொடா்ந்து, வீட்டுக் கடன், காா் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட ரெப்போவுடன் இணைக்கப்பட்ட அனைத்து சில்லறை கடன்களுக்கும் வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது.
இதனால், வீட்டுக் கடன் வட்டி விகிதம் 7.10 சதவீதத்திலிருந்தும், காா் கடன் வட்டி விகிதம் 7.45 சதவீதத்திலிருந்தும் தொடங்குகிறது. இது துறையில் மிகக் குறைந்த வட்டி விகிதங்களில் ஒன்றாகும்.
தற்போதைய உயா் வட்டி சூழலில் வாடிக்கையாளா்களுக்கு மலிவு விலை சில்லறை கடன்களை வழங்கி, அவா்களின் கனவுகளை நிறைவேற்ற உதவுவதே வங்கியின் நோக்கம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...