பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!
சென்செக்ஸ் 447.55 புள்ளிகள் உயர்ந்து 84,929.36 ஆகவும், நிஃப்டி 150.85 புள்ளிகள் உயர்ந்து 25,966.40 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸ் 447.55 புள்ளிகள் உயர்ந்து 84,929.36 ஆகவும், நிஃப்டி 150.85 புள்ளிகள் உயர்ந்து 25,966.40 புள்ளிகளாக நிலைபெற்றது.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vishwanathan
மும்பை: அமெரிக்க பணவீக்கத் தரவுகள் வெளியானதைத் தொடர்ந்து, ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற அதிகரித்து வந்த நம்பிக்கையைாலும், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால், இந்திய குறியீடுகள் தனது நான்கு நாள் தொடர் சரிவிலிருந்து மீண்டு வலுவான நிலையில் முடிவடைந்தன.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 447.55 புள்ளிகள் உயர்ந்து 84,929.36 ஆகவும், நிஃப்டி 150.85 புள்ளிகள் உயர்ந்து 25,966.40 புள்ளிகளாக நிலைபெற்றது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1% உயர்வுடன் நிறைவான நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 தலா 0.3% சரிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 3,215 பங்குகள் வர்த்தகமான நிலையில், 2,184 பங்குகள் உயர்ந்தும், 939 பங்குகள் சரிந்தும் 92 பங்குகள் எந்தவித மாற்றமின்றி முடிவைடந்தன.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், மேக்ஸ் ஹெல்த்கேர், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்த நிலையில், எச்சிஎல் டெக்னாலஜிஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ, ஜேஎஸ்வி ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
வாகனம், மருந்து, எண்ணெய் & எரிவாயு, ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்பு, சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட துறை குறியீடுகள் 0.5 முதல் 1% வரை உயர்ந்தன.
பங்குகள் சார்ந்த செயல்பாடுகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம், சந்தையில் உள்ள உதயம்ஸ் அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 1.4% உயர்ந்தன.
அமெரிக்க செனட் சபை பயோசெக்யூர் சட்டத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, மருந்து மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பங்குகள் உயர்ந்தன. நீரஜ் சிமென்ட் நிறுவனத்தின் பங்குகள் ரூ.322.27 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றதையடுத்து அதன் லாபம் 6% எட்டியது. என்.பி.சி.சி. இந்தியா பங்குகள் ரூ.179 கோடி மதிப்புள்ள ஆர்டரை கையகப்படுத்தியதால் அதன் பங்குகள் 5 % உயர்ந்தன.
ரூ.39,600 கோடி மதிப்புள்ள எம்.யூ.எப்.ஜி. ஒப்பந்தத்திற்குப் பிறகு ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்ந்தன. டெண்டர்களில் பங்கேற்பதிலிருந்து நிறுவனத்தைத் தடை செய்த அரசு உத்தரவை, தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து பி.எல்.எஸ். இன்டர்நேஷனல் பங்குகள் 2% உயர்ந்தன.
கர்நாடகாவின் ஹூப்ளி ஆலையில் வணிக உற்பத்தியைத் தொடங்கியதையடுத்து குஜராத் அம்புஜா எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 6.5% உயர்ந்தன.
சுமிடோமோ கெமிக்கல், தேஜஸ் நெட்வொர்க்ஸ், ஆவாஸ் ஃபைனான்சியர்ஸ், ஹச்.எப்.சி.எல், எஸ்.கே.எப். இந்தியா, யுனைடெட் ப்ரூவரீஸ், அஃப்கான்ஸ் இன்ஃப்ரா, வெஸ்ட்லைஃப் ஃபுட், சனோஃபி இந்தியா, ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், என்.சி.சி, எஸ்.ஜெ.வி.என், பதஞ்சலி ஃபுட்ஸ் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 52 வார குறைந்தபட்ச விலையை எட்டியது.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ், லாரஸ் லேப்ஸ், அசோக் லேலண்ட், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், டைட்டன் நிறுவனம், ஃபெடரல் வங்கி, இந்தியா சிமெண்ட்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் காப்பர் உள்ளிட்ட 100 பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது.
இன்று பட்டியலிடப்பட்ட புதிய பங்குகள்:
ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சி, நிஃப்டி-யில் பங்கு ஒன்றுக்கு ரூ. 2,600 என்ற விலையில் அறிமுகமாகி, அதன் ஐபிஓ விலையை விட 20% அதிகமான பிரீமியத்துடன் வர்த்தகமானது. வர்த்தக முடிவில், ஒரு பங்கின் விலை ரூ.2,576.40 ஆக முடிவடைந்தது. இது 19% அதிகமாகும்.
இதையும் படிக்க: வளரும் வணிகப் பிரிவில் 100 கிளைகள்: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இலக்கு
At close, the Sensex was up 447.55 points or 0.53 percent at 84,929.36, and the Nifty was up 150.85 points or 0.58 percent at 25,966.40.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது