வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 325-ஐ கடந்த உயிர்ப் பலிகள்!
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் 326 பேர் பலியாகியுள்ளது குறித்து...
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் 326 பேர் பலியாகியுள்ளது குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Ahmed Thaha
வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால், 2025 ஆம் ஆண்டில் டெங்குவால் பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.
வங்கதேச நாட்டில், கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெங்கு பாதிப்பால் புதியதாக 833 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும்; இதனால், நிகழாண்டில் (2025) டெங்கு பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3,332 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 62.4 சதவிகித ஆண்களும், 37.6 சதவிகித பெண்களும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் டெங்கு பாதிப்பால் 575 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விநாயகர் பற்றி குரோக் - எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!
In Bangladesh, 3 people have died from dengue fever in the last 24 hours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது