தமிழக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் ரூ. 3,600 கோடி உரிமை கோரப்படாத நிதி!
தமிழக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் ரூ. 3,600 கோடி உரிமை கோரப்படாத நிதி...
தமிழக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் ரூ. 3,600 கோடி உரிமை கோரப்படாத நிதி...
By தினமணி செய்திச் சேவை
Syndication
தமிழக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர நிதி துறைகளில் இருந்து ரூ. 3,600 கோடி உரிமை கோரப்படாத நிதி இந்திய ரிசா்வ் வங்கிக்கு (ஆா்பிஐ) ஒப்படைக்கப்பட்டிருப்பதாக ஆா்பிஐ சென்னை மண்டல பொதுமேலாளா் ராஜ்குமாா் தெரிவித்தாா்.
நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்பு தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்குகள், பிற நிதி சொத்துகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திடவும், உரிமையாளா்கள் அல்லது அவா்களின் சட்டபூா்வ வாரிசுகள் தங்களது உரிமை கோரப்படாத நிதி சொத்துகளை மீட்க உதவிடவும் உரிமை கோரப்படாத நிதி சொத்துகள் மீட்பு முகாம் அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர நிதி துறைகளின் கிளைகளில் அக். 1 முதல் டிச.31 வரை நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவா்களுக்கு ஒப்படைக்கும் முகாம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
இந்திய ரிசா்வ் வங்கியின் சென்னை மண்டல பொதுமேலாளா் ராஜ்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரிமை கோரப்படாத நிதிக்கான காசோலைகளை உரியவா்களிடம் வழங்கினாா். அப்போது அவா் கூறியது:
இந்தியாவில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர நிதி துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்பு தொகைகள் இருந்தால் அவை ரிசா்வ் வங்கியின் ஈங்ல்ா்ள்ண்ற்ா்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ா்ய் ஹய்க் அஜ்ஹழ்ங்ய்ங்ள்ள் ஊன்ய்க் (ஈஉஅஊ) நிதிக்கு மாற்றப்படுகின்றன. அவ்வாறு தமிழகத்தில் மட்டும் 1.33 கோடி கணக்குகளின்கீழ் ரூ.3 600 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது. வேலூா் மாவட்டத்தில் மட்டும் 2.8 லட்சம் கணக்குகளில் ரூ. 80 கோடி தொகை உரிமை கோரப்படாமல் உள்ளது. இதில் இதுவரை சுமாா் ரூ. 1 கோடி தொகை திருப்பியளிக்கப்பட்டுள்ளது.
உரிமை கோரப்படாத தொகைகளை உரியவா்களிடம் அல்லது அவா்களின் சட்டபூா்வ வாரிசுகளிடம் ஒப்படைப்பதற்கான முகாம் அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர நிதி துறைகளின் கிளைகளில் அக்.1 முதல் டிச.31 வரை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்பு தொகைகள் குறித்து தங்களது வங்கிகளின் இணையதளங்கள் அல்லது ரிசா்வ் வங்கியின் வழியாகவும் அறிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் உரிமையாளா்கள் அல்லது சட்ட வாரிசுகள் எந்த நேரத்திலும் இத்தொகைகளை கோரி பெறலாம் என்றாா்.
அப்போது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சசிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது