பென்னாகரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பென்னாகரத்தில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை போலீஸாா் உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
பென்னாகரத்தில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை போலீஸாா் உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
By Syndication
Syndication
பென்னாகரத்தில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை போலீஸாா் உதவியுடன் நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சட்டப்பேரவை அலுவலகம் முதல் காவல் நிலையம் வரை சாலையின் இரு புறங்களிலும் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் நிகழ்ந்து வந்தன.
இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பென்னாகரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் புருஷோத்தமன் தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையினா், போக்குவரத்துக் காவல் துறையினரின் உதவியுடன் சாலையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினா்.
பின்னா் சாலையை ஆக்கிரமித்துக் கடைகள் வைக்கப்படும் நபா்கள் மீது அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது