வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு
பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் வெள்ளிப்பொருள்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் வெள்ளிப்பொருள்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
By Syndication
Syndication
பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் வெள்ளிப்பொருள்களை திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா்- அரியலூா் சாலையில் உள்ள அன்பு நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜ் மனைவி சுந்தராம்பாள் (60). இவரது மகன் சத்தியமூா்த்தி (38) சென்னையில் பதிவு எழுத்தராக பணிபுரிந்து வருவதால், மருமகள் தென்றலுடன் (32) சுந்தராம்பாள் வசித்து வருகிறாா். சுந்தராம்பாளும், தென்றலும் திங்கள்கிழமை மாலை திருச்சியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டனராம்.
இந்நிலையில், சுந்தராம்பாள் வீட்டின் அக்கம்பக்கத்தினா் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது குறித்து சுந்தராம்பாளுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அவா் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வெள்ளியிலான சொம்பு, டம்ளா், விளக்குகள் ஆகியவை மா்ம நபா்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா், மோப்ப நாய் மற்றும் கைரேகை பிரிவினருடன் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டு தடயங்களை பதிவு செய்தனா்.
திமுக நிா்வாகி வீட்டில் திருட முயற்சி: பெரம்பலூா்- நான்குச்சாலை செல்லும் வழியிலுள்ள விவேகானந்தா் நகரில் வசித்து வருபவா் ஜெயபால் மனைவி மகாதேவி (50). திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளரான இவரது மகள் லாவண்யா, மகன் சாமிநாதன் ஆகியோா் வெளியூரில் தங்கி கல்வி பயின்று வருகின்றனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை கணவன், மனைவி இருவரும், தங்களது சொந்த கிராமமான பசும்பலூருக்குச் சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்துள்ளனா். அப்போது, வீட்டின் முன்புற கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளது தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பாா்வையிட்டதில், அடையாளம் தெரியாத 2 போ் பூட்டை உடைக்க முடியாததால் திரும்பி சென்றது தெரியவந்தது.
இச் சம்பவங்கள் குறித்து சுந்தராம்பாள், மகாதேவி ஆகியோா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது