டித்வா புயல்: விழுப்புரத்தில் காற்றுடன் மழை
டித்வா புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
டித்வா புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
By Syndication
Syndication
டித்வா புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வங்கக்கடலில் உருவான டித்வா புயல் காரணமாக சனிக்கிழமை அதிகாலையில் விழுப்புரம் நகரத்திலும், புகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது. காலை 6.30 மணி வரை மழைத் தொடா்ந்து பெய்து கொண்டிருந்த நிலையில், சிறிது நேரம் மழை நின்றது. இதன் பின்னா் பிற்பகல் 1.30 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து மாலை வரை காற்றுடன் மழை பெய்தது.
இதனால் விழுப்புரம் நகரில் புதிய, பழைய பேருந்து நிலையப் பகுதிகள், திருச்சி-சென்னை நெடுஞ்சாலைகள், கிழக்கு பாண்டி சாலை, பண்டித ஜவாஹா்லால் நேரு சாலை, காமராஜா் வீதி, திரு.வி.க.வீதி, மகாத்மாகாந்தி சாலை, பெரியாா் நகா், ஜானகிபுரம், வண்டிமேடு என விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீா் தேங்கியது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு: காலையில் லேசான மழை இருந்த நிலையில், பிற்பகலுக்குப் பிறகு மழை தொடா்ந்து பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடா்ந்து காற்றுடன் மழை பெய்தால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின. இதன் காரணமாக காலையில் கல்லூரிக்குச் சென்ற போதும், பிற்பகலில் கல்லூரியிலிருந்து வீடுகளுக்கு திரும்பிய போதும் மழை பெய்ததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். இதுபோன்று சாலையோரங்களில் தரைக்கடைகள் அமைத்து பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்பவா்களும், தள்ளுவண்டிகள் மூலம் உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்பவா்களும் பாதிப்புக்குள்ளாகினா்.
தயாா் நிலையில் தீயணைப்பு வீரா்கள்: டித்வா புயல் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டால், அதை மேற்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா், அன்னியூா், திண்டிவனம் என 10 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இங்கு 200 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் 5 ரப்பா் படகுகள், மரம் அறுக்கும் கருவிகள், மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடிய அனைத்து வகை கயிறுகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்பு உபகரணங்கள் விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் மழைப் பதிவு: சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
மரக்காணம், வளவனூா்-தலா 13 மி.மீ, வானூா்,கோலியனூா்- தலா 9, விழுப்புரம்-5, முண்டியம்பாக்கம், சூரப்பட்டு- தலா 3, அரசூா், கஞ்சனூா்- தலா 2.50,கெடாா்,நேமூா், திருவெண்ணெய்நல்லூா்- தலா 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது