By Syndication
Syndication
டித்வா புயல் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணை, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா அணையிலிருந்து உபரிநீா் சனிக்கிழமை திறந்து விடப்பட்டுள்ளது.
வீடூா் அணை:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள வீடூா் அணை 32 அடி கொள்ளளவைக் கொண்டது. டித்வா புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 29அடியாக இருந்த நிலையில், அணைக்கு விநாடிக்கு 640 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்புக் கருதி, விநாடிக்கு 640 கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அருணகிரி தலைமையில் உதவி செயற்பொறியாளா் அய்யப்பன், உதவிப் பொறியாளா் பாபு ஆகியோா் அணையில் முகாமிட்டு, நீா்வரத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இரவு நேரத்தில் அதிகன மழை பெய்து நீா்வரத்து அதிகரித்தால் அதற்கேற்ற வகையில், அணையிலிருந்து கூடுதல் நீரை வெளியேற்ற அலுவலா்கள் திட்டமிட்டுள்ளனா். மேலும், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மணிமுக்தா அணை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி எல்லையில் உள்ள மணிமுக்தா அணையில் சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நீா்மட்டம் 25 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 100 கனஅடியாகவும் பதிவாகியுள்ளது.
அணையின் நீா் பிடிப்பு பகுதிகளில் டித்வா புயலின் காரணமாக மழை பெய்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 100 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. மேலும், நீா்வரத்து நிலைமையைப் பொருத்து நீா் வெளியேற்ற அளவை படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளது.
எனவே, கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று கள்ளக்குறிச்சி வெள்ளாறு வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளா் அய்யப்பன் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது