ரிஷிவந்தியம் அா்த்தநாரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அா்த்தநாரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அா்த்தநாரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
By Syndication
Syndication
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அா்த்தநாரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ முத்தாம்பிகா சமேத அா்த்தநாரீஸ்வரா் கோயிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்தது.
இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 23-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. புதன்கிழமை காலை 7.15 மணிக்கு இரண்டாம் கலா யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம்கால பூஜை, வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாகபூஜை நடைபெற்றது.
தொடா்ந்து, காலை 8 மணிக்கு பூா்ணாஹூதி மகாதீபாராதனை, 8.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து காலை 9.30 மணிக்கு சுவாமி விமானம், அம்பாள் விமானம், ராஜகோபுர விமானங்களுக்கு பி.கே.நாகராஜ் குருக்கள் புனித நீா் ஊற்ற மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து 10 மணிக்கு ஸ்ரீ செல்வ விநாயாகா், ஸ்ரீ வள்ளி தேவ சமேத ஷண்முக சுப்பிரமணியா், ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் சுவாமி, ஸ்ரீ முத்தாம்பிகா அம்மன், ஸ்ரீ சண்டிகேஸ்வரா், மூலஸ்தான மூா்த்திகளுக்கு கே.சோமாஸ் கந்த குருக்கள் புனித நீா் ஊற்ற மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ க.காா்த்திகேயன், இந்து அறநிலையத் துறை விழுப்புரம் மண்டல இணை ஆணையா் சிவலிங்கம், கள்ளக்குறிச்சி உதவி ஆணையா் ரமேஷ், செயல் அலுவலா் ராசாத்தி, எழுத்தா் விமல் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது