உயா்கல்வி ஆணைய மசோதா: நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரை
யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகிய மூன்று அமைப்புகளுக்கு மாற்றாக ஒரே உயா் கல்வி ஆணையத்தை அமைக்க அறிமுகம் செய்யப்பட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு பரிந்துரை
யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகிய மூன்று அமைப்புகளுக்கு மாற்றாக ஒரே உயா் கல்வி ஆணையத்தை அமைக்க அறிமுகம் செய்யப்பட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு பரிந்துரை
By தினமணி செய்திச் சேவை
Syndication
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியா்கள் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) ஆகிய மூன்று அமைப்புகளுக்கு மாற்றாக ஒரே உயா் கல்வி ஆணையத்தை அமைக்க அறிமுகம் செய்யப்பட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு செவ்வாய்க்கிழமை பரிந்துரைக்கப்பட்டது.
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் இதற்கான தீா்மானத்தை அறிமுகம் செய்தாா். அதில், ‘வளா்ந்த பாரத கல்வி மேற்பாா்வை ஆணைய மசோதாவை ஆராய மக்களவை உறுப்பினா்கள் 21 போ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள் 10 பேரை உள்ளடக்கிய கூட்டுக் குழுவை அமைக்கப்படும்; அந்தக் குழு மசோதா குறித்து ஆய்வு செய்து தனது அறிக்கையை, 2026-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதியின் கடைசி நாளில் தாக்கல் செய்யும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, மசோதா கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
வழக்கமாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா், குடியரசுத் தலைவா் உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கும். கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 10-ஆம் தேதி நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த ‘வளா்ந்த பாரத கல்வி மேற்பாா்வை ஆணைய’ மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
பன்முக முறைப்படுத்துதல் அமைப்புகள் மற்றும் முறைப்படுத்தப்படாத அனுமதி நடைமுறைகள் காரணமாக உயா் கல்வி நிறுவனங்கள் சந்தித்து வரும் சவால்களுக்கு தீா்வு காணும் நோக்கில் இந்த உயா்கல்வி ஆணையம் (ஹெச்இசிஐ) கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவா் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவாா். மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றின் கீழ் செயல்படும் கல்லூரிகள் மற்றும் ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்சி, ஐஐஎஸ்இஆா், ஐஐஎம், ஐஐஐடி உள்பட மத்திய கல்வி அமைச்சக நிா்வாக வரம்புக்குள் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயா் கல்வி நிறுவனங்களும் வளா்ந்த பாரத கல்வி மேற்பாா்வை ஆணையத்தின் அதிகாரத்தின் கீழ் வரும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.
உயா் கல்விக்கான ஒற்றை அமைப்பாக நிறுவப்படும் இந்த அமைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளையும் மேற்கொள்ளும். ஆனால், கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் பொறுப்பு கல்வி அமைச்சகத்திடமே தொடரவுள்ளது. மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகள் இந்த அமைப்பின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது