உதவிப் பேராசிரியர் தேர்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!
உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு.
உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு.
By இணையதளச் செய்திப் பிரிவு
C Vinodh
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான நுழைவுச் சீட்டு(Hall Ticket) வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.04/2025, நாள் 16.10.2025 இன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு எதிர்வரும் டிச. 27 அன்று (காலை மற்றும் மாலை) நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களில் நடைபெற உள்ளது.
தேர்வர்கள் தேர்வு நடைபெறும் மையம் சார்ந்த விவரங்கள் தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, தேர்வர்கள் இன்று(டிச. 11) முதல் அவர்களது பயணர் ஐடி(User Id) மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் இடர்ப்பாடு மற்றும் அதன் தொடர்பான ஐயங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறை தீர்க்கும் மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு மையங்கள் மாற்றம் சார்ந்த கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ. 10,000 பயணக் கூப்பன்! - இண்டிகோ அறிவிப்பு
Admit cards for the Assistant Professor selection exam have been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது